‘குக் வித் கோமாளி ஷோ’ இந்த வாரமும் ஒளிபரப்பு இல்லை – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!!

0

காமெடி ஷோ என்று இல்லாமல் அனைத்து தர மக்களும் கலந்து ரசிக்கக்கூடிய ரியாலிட்டி ஷோ என்று பார்த்தால் அது கண்டிப்பாக குக் வித் கோமாளி ஷோ தான். இந்த வாரமும் குக் வித் கோமாளி ஒளிபரப்பு செய்யப்படப்போவதில்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தவாரம் ஒளிபரப்பு இல்லை

வீக்கெண்டு ஷோவில் அதிக டிஆர்பி யுடன் விஜய் டீவியை முன்னிறுத்தி வைத்திருக்கும் ஷோ குக் வித் கோமாளி தான். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை முதல் மக்கள் காத்திருப்பதென்றால் அது குக் வித் கோமாளி ப்ரோமோவுக்காக தான். கோமாளிகளாக கலக்கும் விஜய் நட்சத்திரங்கள் ஒரு ரகம் என்றால் குக்காக அசத்தும் திரை நட்சத்திரங்களும் வேற ரகம் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிறிதளவு கூட சோர்வே இல்லாமல் மொத்த ஷோவயும் பார்க்க செய்யமுடியுமென்றால் அது கோமாளிகளால் தான் கூடும். இந்த நிகழ்ச்சி வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகும். சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாள் என்பதால் இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை மட்டும் ஒளிபரப்பு .செய்யப்பட்டது. இந்த வாரம் இரண்டு நாள் ஷோ ஒளிபரப்பாகும் என காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சியாக இந்தவாரமும் இந்நிகழ்ச்சி சனிக்கிழமை மட்டுமே ஒளிபரப்பாக உள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் லான்ச் இருப்பதால் குக் வித் கோமாளி ஷோ ஒளிபரப்பாகப்போவதில்லை. மேலும் கடந்த வாரம் வெளியான ஷோவின் இரண்டாம் பகுதியான இம்மியூனிட்டி சுற்று மட்டும் இந்த வாரம் வெளியாக உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியை இரண்டு பகுதிகளாக எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here