சையது முஷ்டாக் அலி காலிறுதி போட்டி – தமிழ்நாடு VS ஹிமாச்சல் அணிகள் பலப்பரீட்சை!!

0

தற்போது இந்தியாவில் வைத்து உள்நாட்டு தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. தற்போது இந்த கோப்பைக்கான லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் காலிறுதி சுற்றுகள் தொடங்கவுள்ளது.

சையது முஷ்டாக் அலி:

கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் இந்தியாவில் வைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர் எதுவும் நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டு தொக்கத்தில் முதற்கட்டமாக சையது முஷ்டாக் அலி கோப்பையை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு அதனை தற்போது நடத்தி வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் தொடங்கிய இந்த தொடர் கடந்த 19ம் தேதியுடன் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்த தொடரில் மொத்தம் 36 அணிகள் கலந்துள்ளது. அனைத்து அணிகளையும் 6 பிரிவுகளாக பிரித்துள்ளனர். மேலும் இந்த போட்டிக்காக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் காலிறுதி ஆட்டம் நடக்கவுள்ளது. மேலும் வரும் 29ம் தேதி அன்று அரையிறுதி போட்டியும் மற்றும் 31ம் தேதி அன்று இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது. லீக் சுற்றின் முடிவில் தமிழ்நாடு அணி தான் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. வரும் 26ம் தேதி நடக்கவுள்ள காலிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஹிமாசல பிரதேச அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் தமிழக அணி வெற்றிபெற்றால் ராஜஸ்தான் மற்றும் பீகார் மோதும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுமோ அந்த அணியுடன் தமிழக அணி விளையாட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here