Sunday, May 5, 2024

இனி முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாது – சுகாதாரத்துறை அமைச்சர்!!

Must Read

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அச்சம்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று பரவி வருகின்றது. இதனால் நாளுக்கு நாள் பலரும் உயிர் இழந்து வருகின்றனர். இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 8 கோடிக்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இப்படியாக இருக்க தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட அதிகரித்து வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனாவின் 3வது அலை டெல்லியில் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் அடுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. இதற்கு மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வந்தாலும் பொது முடக்கத்தினை அமல்படுத்துவது பயனற்ற ஒன்றாகும். மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்”

ஆலோசனை கூட்டம்:

“சமூக இடைவெளியினை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவது போன்ற தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டால் மட்டுமே இந்த தொற்று பதிப்பில் இருந்து வெளி வர முடியும். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் பொது முடக்கம் அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். மத்திய அரசு சார்பில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்”

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“கூடுதலாக, அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு சார்பில் 750 கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார். தற்போது வரை டெல்லியில் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றாதவர்களிடம் இருந்து 45 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது” இவ்வாறாக தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது உள்ள நிலவரப்படி, நேற்று மட்டும் 3,235 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 95 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -