Saturday, May 18, 2024

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நீதிபதி சாஹி – மருத்துவமனை தரப்பில் தகவல்!!

Must Read

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் என்று மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.பி.சாஹி:

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் மருத்துவர்கள், காவல் துறையினர், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழக அரசு தீவிரமாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி காணப்படுகிறது என்று அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு சிகிச்சை அளித்து வந்தார்கள். பின்னர், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து தினசரி 2,500க்குள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

16 வயது சிறுவன் உயிரிழப்பு எதிரொலி.. வனத்துறை வசம் மாறும் குற்றால அருவிகள்?? வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -