
சினிமாவில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மாரி முத்துக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்த சீரியல் என்றால் அது எதிர் நீச்சல். படத்தில் நடிக்கும் போது கிடைக்காத வரவேற்பு இந்த சீரியலில் மூலம் அவருக்கு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் சொல்ல போனால் இந்த சீரியல் மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வந்த அவர் நேற்று காலை மாரடைப்பால் இறந்து போன சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஏய் இந்தாமா என்ற வசனம் இனிமேல் கேட்கவே முடியாது என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்று எதிர் நீச்சல் சீரியல் குழு வருத்தப்பட்டனர். இந்நிலையில் எதிர் நீச்சல் சீரியலில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் அடுத்ததாக ம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்க இயக்குனர் திருச்செல்வம் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம்.., முதலமைச்சர் நடத்திய ஆலோசனை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!