எந்த கஷ்டமும் இல்லாமல் ஈஸியா முடி வளரணுமா?? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!! மிஸ் பண்ணாம படிங்க!!

0
சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு இனி பாய் சொல்லிடுங்க, இனி இந்த ஆயிலை ட்ரை பண்ணி பாருங்க!
சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு இனி பாய் சொல்லிடுங்க, இனி இந்த ஆயிலை ட்ரை பண்ணி பாருங்க!

தினமும் நாம தலையில் தேய்ச்சிட்டு வரும் கெமிக்கல் நிறைந்த தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக இன்னைக்கு பாக்க போற ஹேர் ஆயில் யூஸ் பண்ணிட்டு வருவதன் மூலம் இழந்த முடியை திரும்ப பெறுவதற்கும், புதிதாக முடி வளர்வதற்கும் 100% வாய்ப்பிருக்கிறது. வாங்க இந்த ஆயிலை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கறிவேப்பிலை – 250 கிராம்
  • கற்றாழை – 1
  • வெந்தயம் – 1 டீஸ்பூன்
  • கருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
  • செக்கு தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை:

இந்த மூலிகை எண்ணெய்யை தயார் செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை, வெந்தயம், கருஞ்சீரகம், சிறு துண்டாக நறுக்கிய கற்றாழையை சேர்த்து பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும். எண்ணெய் சூடாகிய பிறகு நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை எண்ணெயில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

எண்ணெய் நன்றாக கொதித்த பின்பு அடுப்பை ஆப் செய்யவும். தயாரித்துள்ள எண்ணெய் ஆரிய பின்பு ஒரு சல்லடையில் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு எடுத்துக் கொள்ளவும். இதை வாரத்தில் மூன்று நாள் மட்டும் தலையில் தேய்த்து வரவும். இந்த ஆயில் குளிர்ச்சி என்பதால் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், எண்ணையை தேய்த்தவுடன் 15 நிமிடம் கழித்து குளித்து விட வேண்டும் . இப்படி செய்வதன் மூலம் இழந்த முடியை திரும்ப பெறுவதற்கும், புதிதாக முடி வளர்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here