எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 0.86 மீ அதிகரிப்பு – நேபாள அரசு அறிவிப்பு!!

0

எவரெஸ்ட் சிகரத்தின் 1955-ஆம் ஆண்டு அளந்த உயரத்தை ஏற்க மறுக்கும் சீனா மற்றும் நேபாளம் தற்போது புது உயர அளவை வெளியிட்டு உள்ளது. அதில் 0.86 மீட்டர் உயரம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தின் புது உயரம்:

எவெரெஸ்ட் சிகரம் உலகின் மிகவும் உயரமான சிகரம் என்பது அனைவரும் அறிந்ததே. 1955ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவிடப்பட்டது. அப்போது சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் (29,029 அடி) என்ற முடிவுக்கு வரப்பட்டது. இதனை ஏற்க நேபாள அரசுக்கு உடன்பாடில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின் 15 ஆண்டுகள் கழித்து சீனா மேற்கொண்ட அளவீட்டின்படி சிறு மாற்றம் செய்யப்பட்டு எவரெஸ்ட் உயரம் 88,44.43 மீட்டர் என்று கூறப்பட்டது. எனினும், 1955ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அளவீட்டின் முடிவுகளையே உலகம் இன்னும் ஏற்கிறது.

இந்நிலையில், தற்போது சீனா, நேபாளம் ஆகிய நாடுகள் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளந்து வருகின்றன. பின்னர், 2019’ல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நேபாள பயணத்தின் போது, இரு நாடுகளும் இணைந்து உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தை கூட்டாக அறிவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அளவீட்டு பணி கொரோனாவால் தாமதமாகியது. எனினும், சீனா தனது குழுவை மே மாதம் அனுப்பி வைத்தது. மறுபுறம் நேபாளம் தனது தரப்பில் 2019ஆம் ஆண்டிலேயே எவரெஸ்ட் சிகரத்தை அளக்கும் பணியை தொடங்கிவிட்டது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த உலகின் முதல் கொரோனா தடுப்பூசி!!

இதையடுத்து எவரெஸ்டின் உயரம் குறித்து ஒரு வருடமாக அளவீடு நடத்திய பின்னர், நேபாளம் இன்று புதிதாக அளவிடப்பட்ட எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவித்துள்ளது. அதன்படி, எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் உயரம் அதிகரித்து 8,848.86 மீட்டராக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here