ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கான காரணம் இது தான் – மருத்துவ குழு விளக்கம்!!

1

கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது வெளிவந்துள்ள நிலையில் அடுத்ததாக ஆந்திராவில் மக்கள் பலர் மர்ம நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோயினால் தற்போது 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் தாக்கம்:

இந்த 2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் பாதிப்புகளை மட்டுமே அளித்து வருகின்றது. அதன் படி தற்போது மீண்டும் அனைவரும் அச்சம் கொள்ளும் வகையில் ஆந்திராவில் வினோதமான அதே சமயம் மர்மமான நோய் ஒன்று ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு பகுதியில் மக்களை தாக்கியுள்ளது. இந்த மொய் எதனால் வந்தது? எப்படி அனைவருக்கும் ஒரே மாதிரி பரவியது? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்களுக்கு இந்த நோய் வலிப்பு மாதிரியாகவும் தெரிகிறது. மக்கள் சில நேரங்களில் வினோதமாக கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே மாதிரியாக கிட்டத்தட்ட 200 பேர் பாதிக்கப்பட்டனர். பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். முதற்கட்டமாக தண்ணீரில் ஏதேனும் நச்சு பொருள் கலந்துள்ளதா? என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. முடிவுகளில் தண்ணீரில் எந்த வித நச்சு பொருட்களும் கலக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

பாதிப்பு எண்ணிக்கை:

இது ஒரு புறம் இருந்தாலும் மக்களின் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. கடந்த 4 ஆம் தேதியில் இருந்து மக்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரித்தான சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் இந்த மர்ம நோய்க்கான மருந்துகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு!!

இதனை அடுத்து மக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உலக சுகாதார அமைப்பு மற்றும் டெல்லி, புனே எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். இந்த பரிசோதனை முடிவுகளில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நச்சு பொருட்களான நிக்கல், காரீயம் போன்ற வேதிப்பொருட்கள் கலந்ததால் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தகவல் கூறப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. ஆந்திராவில் பரவி வரும் புதிய விதமான நோய்க்கு உடனடியாக அந்த ஏரியா மக்களைவேறு எங்கும் வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல அனுமதிக்காமல் இருந்தால் இந்த நோயில் இருந்து மற்றவருக்கு பரவாமல் பாதுகாக்கலாம் இது என்னுடைய கருத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here