மழை நேரத்துல சூடா மொறு மொறுன்னு சாப்டணுமா?? “ஆலு சமோசா” செஞ்சு பாருங்க!!

0

மாலை நேரத்துல மழை பெய்தாலே நம்ம வீட்ல இருக்குற சின்ன குழந்தைல இருந்து பெரியவங்க வரைக்கும் ஸ்னாக்ஸ் கேட்டு இல்லத்தரசிகளை தொல்லை படுத்த ஆரம்பிச்சுருவாங்க. என்ன ஸ்னாக்ஸ் பண்ணி குடுக்குறதுன்னு ரொம்ப குழப்பமா இருக்கா…குழப்பமே வேணாங்க!!! சூடா மொறு மொறுன்னு “ஆலு சமோசா” செஞ்சு குடுத்து அசத்துங்க!!! சமோசா கூடவே சூடா டீயும் இருந்தா அது சொர்க்கம் தாங்க!!! எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு – 250 கிராம்
ஓமம் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 2 (பெரியது) வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
பட்டாணி – 1 கப்
இஞ்சி,பூண்டு இடித்தது – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீ ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மாவு, ஓமம், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு 5 நிமிடம் வரை பிசைந்து கொள்ள வேண்டும். இந்த மாவை 30 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். இப்பொழுது மசாலாவை ரெடி பண்ணுவதற்கு ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னர் இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், உப்பு, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து பச்சை வடை போகும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது வேக வைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். கடைசியாக சிறிது கொத்தமல்லி சேர்த்து மசாலாவை ஆற விட வேண்டும்.

5 ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல “ஸ்பைசி டிராகன் Prawn ப்ரை”

இப்பொழுது பிசைந்து வைத்திருக்கும் மாவை சம பங்குகளாக பிரித்து கொள்ள வேண்டும். அதில், ஒரு உருண்டையை எடுத்து வட்டமாக தேய்த்து அதை இரண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். அரை வட்டமாக இருக்கும் மாவில் சிறிது மசாலாவை வைத்து மாவின் எல்லா பக்கத்திலும் சிறிது தண்ணீர் தடவி சமோசா உருவில் மடக்கிக் கொள்ள வேண்டும். நல்ல சூடான எண்ணையின் மொறு மொறுப்பாக பொரித்தெடுக்கவும். இப்பொழுது “ஆலு சமோசா ” சூப்பரா ரெடி ஆயிருச்சு. புதினா சட்னி கூட சமோசாவை பரிமாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here