5 ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல “ஸ்பைசி டிராகன் Prawn ப்ரை” – வீட்லயே செஞ்சு அசத்துங்க!!!!

0

இறாலில் அதிகமா உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. மத்த எந்த உணவுலயும் இல்லாத ஓமெகா 3 சத்து கடல் உணவான இறாலில் மட்டும் தாங்க அதிகமா இருக்கு. இறால் சத்துல மட்டும் இல்லங்க டேஸ்ட்டேலையும் பெஸ்ட் தான். அப்படிப்பட்ட இறாலை 5 ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல சாப்பிடணும்னு யாருக்கு தான் ஆசை இருக்காது. வீட்லயே 5 ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இறாலை எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க…

இறாலில் உள்ள நன்மைகள்:

* மிகவும் குறைந்த அளவில் கொழுப்புச்சத்து

* அதிகமான ப்ரோடீன்

* கலோரிகள்

* பொட்டாசியம்

* கால்சியம்

*செலினியம்

* வைட்டமின் ஈ

* வைட்டமின் ஏ

* பாஸ்பரஸ்

* அதிகப்படியான ஜின்க் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.

* கச்சிதமான உடல் வாகு பெறுவதற்கு உதாஹவுகிறது.

* புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்துகிறது.

இவ்வளவு மருத்துவ நன்மைகளை கொண்ட இறாலை ஸ்பைசியா எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

இறால் – 500 கிராம்
சோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரித்தெடுப்பதற்கு தேவையான அளவு
முட்டை – 1
மைதா மாவு – 6 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

சாஸ் செய்ய தேவையான பொருட்கள்:

முந்திரி – 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 20 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
குடை மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
டொமட்டோ சாஸ் – 4 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/4 கப்
வெங்காயத்தாள் – 1 கையளவு

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் இறால், சோளமாவு, மைதாமாவு, உப்பு, மிளகுத்தூள்,முட்டை சேர்த்து பிரட்டி எண்ணையில் பொன் நிறம் ஆகும் வரை பொறித்து எடுத்துக்கொள்ளவும். இதை தனியே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னர் அதில், குடை மிளகாய், பச்சை மிளகாய், தாக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு, சர்க்கரை, வினிகர் இவற்றை சேர்த்து வதக்கிய பின்பு இறாலையும் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு, சோளமாவை தண்ணீரில் கரைத்து இதில் சேர்க்க வேண்டும். கடைசியாக வெங்காயத்தாளை சேர்த்தால் “ஸ்பைசி டிராகன் prawn ப்ரை ” ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here