டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – இரவு 7 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா!!

0

மத்திய அரசு வெளியிட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் தங்கள் போராட்டங்களை கைவிடுவதாக இல்லை.6-ம் கட்ட பேச்சு வருகிற 9-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன் விவசாயிகள் சங்க தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்:

டெல்லியில் கடும் குளிரையும் பொறுப்பெடுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 13 நாளாக நடைபெறும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து பல அரசியல் அமைப்பினரும் எதிர்கட்சியினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு வருகிற 9-ம் தேதி 6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஆனால் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத விவசாய சங்க தலைவர்கள் இன்று “பரத் பந்த்” போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்று நடத்தும் பாரத் பந்த்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 0.86 மீ அதிகரிப்பு!!

இது தொடர்பாக பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கிட் கூறுகையில், “இன்று இரவு 7 மணிக்கு உள்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நாங்கள் இப்போது சிங்கு எல்லைக்குச் செல்கிறோம், அங்கிருந்து உள்துறை அமைச்சரிடம் செல்வோம் என்று தெரிவித்தார்”.

விவசாயிகளை பொறுத்த வரையில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் மத்திய அரசு சில திருத்தங்கள் செய்யலாம் தவிர ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here