பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த உலகின் முதல் கொரோனா தடுப்பூசி – பிரிட்டன் அரசு சாதனை!!

0

உலகில் முதன்முறையாக பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. 90 வயதான மார்கெரட் கெனன் என்ற மூதாட்டி முதன் முதலாக தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

உலகின் முதல் தடுப்பூசி:

உலகம் முழுக்க சுமார் 150 இடங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பல நாடுகளில் சோதனை இறுதிக்கட்டத்தில் வெற்றிகண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஃபைசர்,ஜெர்மனியின் பயோன்டெக், மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களும் உருவாக்கிய தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனைகளிலும் வெற்றிபெற்றுள்ளன. இதில் ஃபைசர் தடுப்பூசி 95 சதவீதமும், மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் செயல்திறன்மிக்கது என்று கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த இரண்டு நாடுகளும் இணைந்து பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் இறங்கியுள்ளது. உலக சுகாதார ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இதுவாகும்.

தற்போது 90 வயதான மார்கெரட் கெனன் என்ற மூதாட்டிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கும் போடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் உறைநிலையில் வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது. இந்த மருந்தை அடுத்ததாக 40 லட்சம் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது??

இதே இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி பயன்படுத்த அந்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் கோவாக்ஸின் தடுப்பூசி இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here