“முகப்பரு” பிரச்சனையா?? ஒரே இரவில் சுலபமா வீட்லயே போக்கிடலாம்!!

0

இளம் வயதினரை அதிகமா பாதிக்கிற ஒரு பிரச்சனைன்னா அது முகப்பரு தாங்க. ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாததும், எல்லா இடங்களையும் மாசு அதிகமா இருக்குறதுக்கு தாங்க இதுக்கு முக்கிய காரணம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுவதும், அதிகமா தண்ணீர் குடிக்குறதுனாலையும் முகப்பரு பிரச்சனையா தவிர்க்கலாம். ஆனா நம்ம வாழ்க்கையின் முக்கியமான நாட்கள்ல எதிர்பாராத விதமாக வர்ற முகப்பருக்களை ஒரே நாளில் வீட்லயே சரி பண்ணிடலாம். எப்படி ஒரே இரவில் முகப்பருவை சரி பண்றதுன்னு பாக்கலாம் வாங்க.

முகப்பரு:

நம்முடைய தோலில் செபேசியஸ் என்ற சுரப்பி அதிகளவில் சுரக்கும் போது, சுரப்பிகளுக்கிடையே தடை ஏற்படுவதினால் முகப்பரு உண்டாகிறது.

ஒரே இரவில் முகப்பருவை போக்குவதற்கு வழிமுறைகள்:

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் செயல்முறைகளை செய்வதினால் பருவின் வீக்கம் வற்றி அதன் வலியைக் குறைக்கிறது. மேலும் பருக்களின் மீது கைகளை தேவை இல்லாமல் வைக்க கூடாது. முகத்தில் அழுக்குகள் இல்லாமல் அடிக்கடி கழுவிக்கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

1. டீ ட்ரீ ஆயில்:

டீ ட்ரீ ஆயில் பாக்டீரியாக்கள் பரவுவதை தடுக்கும் தன்மை கொண்டது. சிறிது தண்ணீரில், டீ ட்ரீ ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.

2. கற்றாழை:

காற்றாழை, தோல் பராமரிப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழையின் சாறை முகப்பருக்கள் மீது வைக்கும் போது பருக்கள் இல்லாமலே போய் விடுகிறது.

3. தேன்:

தேன் சருமத்தில் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது. தேனின் பாக்ட்டீரிய எதிர்ப்பு தன்மை, முகப்பருக்களின் வீக்கத்தை குறைத்து அது குணப்படுத்தும் திறனை அதிகரிக்கிறது.

4. ஆஸ்பிரின்:

ஆஸ்பிரின் மாத்திரையை போடி செய்து சிறிது தண்ணீர் சேர்த்து பருக்களின் மீது வைக்க வேண்டும். நோய் எதிர்ப்பு அழற்சி தன்மை இயற்கையாகவே உள்ள ஆஸ்பிரின் பருக்களை ஆற்றுவதற்கு உதவுகிறது.

5. ஐஸ் கட்டி:

ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி பருக்களின் மீது 20 நொடிகள் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மீண்டும் இப்படி செய்ய வேண்டும். ஐஸ் கட்டி பருக்களினால் ஏற்படும் வலியைக் குறைத்து பருக்கள் சுருங்குவதற்கு உதவுகிறது.

6. க்ரீன் டீ:

உபயோகித்த கிரீன் டீ பையை ஆறிய பிறகு பருக்களின் மீது இரவு முழுவதும் வைக்க வேண்டும். கிரீன் டீ பருக்களின் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here