அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீடு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!!

0
medical college
medical college

அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில், இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ இடஒதுக்கீடு:

தமிழ்நாடு கத்தோலிக் கல்வி கழகம் என்ற அமைப்பின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் “எங்கள் கழகத்தின் கீழ் 2400 பள்ளிகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கு படிக்கும் பாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்ற தமிழக அரசின் அறிவிப்பு பாரபட்சமானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Chennai_High_Court
Chennai_High_Court

அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் அரசுப்பள்ளிகளை போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கிடைக்கின்றன. இதனால் இட ஒதுக்கீட்டையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நீட்டிக்க வேண்டும். எனவே அரசு பிறப்பித்த அரசாணையை மாற்றி வெளியிட உத்தரவிட வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது??

இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், மருத்துவ கல்வி இயக்குநர் ஆகியோர் வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here