சீனாவில் தீவிரமாக பரவும் புதிய பாக்டீரியா காய்ச்சல் – அச்சத்தில் உலக நாடுகள்!!

0

கடந்த வருட டிசம்பர் மாதம் சீனாவின் ஹவான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது. இதுவரை 3 கோடிக்கு மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சீனாவில் ஒரு தொழிற்சாலையில் இருந்து புதிய பாக்டீரியா காய்ச்சல் ஒன்று அப்பகுதியில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அடுத்த தொற்று நோயா? என உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

பாக்டீரியா காய்ச்சல்:

வடகிழக்கு சீனாவில் செயல்படும் ஒரு உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கசிந்த பாக்டீரியா காற்றில் பரவி ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. புருசெல்லோசிஸ் அல்லது மால்டா காய்ச்சல் என அழைக்கப்படும் இந்த நோயால் இதுவரை 3,245 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீன சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது. இந்த நோய் தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ப்ரூசெல்லா எனும் பாக்டீரியா மூலம் ஏற்படும் இந்த காய்ச்சல், கால்நடைகள் மூலமும் பரவ அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த பரவல் ‘ஜொங்மு லான்ஜோ’ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவிலிருந்து தொடங்கியது. இது கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்டது என்று நகர சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

உடல் எடையை எளிமையான முறையில் குறைக்கணுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

பாக்டீரியா பரவத் தொடங்கிய நகரில் 29 லட்சத்திற்கு மேல் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 21,847 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 1,401 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் கூறுகையில், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரின் சில உறுப்புகளில் ஏற்பட்ட மூட்டுவலி அல்லது வீக்கம் போன்றவை நீங்காது என தெரிவித்துள்ளது. ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது மிகவும் அரிதானது என்றும், ஆனால் பெரும்பாலான மக்கள் சுகாதாரம் இல்லாத உணவை சாப்பிடுவதன் மூலமோ அல்லது பாக்டீரியா கசிந்த காற்றினை சுவாசிப்பதன் மூலமோ பாதிக்கப்படுகின்றனர் என கூறப்பட்டு உள்ளது.

பாக்டீரியா பரவியது எப்படி?

விலங்குகளின் பயன்பாட்டிற்காக ப்ரூசெல்லா தடுப்பூசிகளை தயாரிக்கும் போது, ​​தொழிற்சாலை காலாவதியான கிருமிநாசினிகள் மற்றும் சுத்திகரிப்பான்களை பயன்படுத்தியது காரணமாக அனைத்து பாக்டீரியாக்களும் அழியாமல் இருந்துள்ளன. இந்த அசுத்தமான கழிவு வாயு காற்றில் கசிந்து மக்களை தாக்கி உள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆலைக்கான தடுப்பூசி உற்பத்தி உரிமங்களை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் என தீர்மானிக்கப்பட்ட எட்டு பேர் கடுமையாக தண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here