நான் சண்டைகளை ஆரம்பிப்பதில்லை, நிரூபித்தால் ட்விட்டரில் இருந்து விலகுவேன்- கங்கனா அதிரடி!!

0
gangana ranaut
gangana ranaut

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு பாலிவுட் பற்றிய பல உண்மைகளை வெளியிட்டார். இதனால் தொடர்ந்து பலர் எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். சிவசேனா முதல் ஊர்மிளா வரை பலரிடம் சண்டையில் கங்கனா ஈடுபட்டார். இப்பொழுது சண்டையை நான் ஆரம்பிப்பது இல்லை, தவறு என் மீது நிரூபிக்கப்பட்டால் ட்விட்டரில் இருந்து விலகுவேன் என கூறியுள்ளார்.

கங்கனா ரணாவத்

போதை பொருட்கள் விற்பனை பற்றியும் பாலிவுட் பற்றியும் தொடர்ந்து பல உண்மைகளை வெளியிட்டு வந்தார் கங்கனா ரணாவத். மேலும் மும்பையை மினி பாகிஸ்தான் என்றும் விமர்சித்தார். இதனால் கடுப்பான சிவசேனாவை சேர்ந்த பலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Kangana says she is ready to return her padmashri award
Kangana says she is ready to return her padmashri award

மேலும் கங்கனாவின் சொந்த ஊரான இமாச்சல பிரதேசம் தான் போதைப்பொருட்கள் பிறப்பிடம், எனவே அங்கு போதை பொருட்கள் பிரச்சனையை சரிபார்க்குமாறு ஊர்மிளா கங்கனாவிடம் கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த கங்கனா ‘ஊர்மிளா தன் நடிப்பு திறனால் வெளியில் தெரியவில்லை, அவர் ஒரு மென்மையான ஆபாச நட்சத்திரம்’ என்று கூறியுள்ளார்.

kangana ranuat
kangana ranuat

பிறகு கங்கனா நகைச்சுவை நடிகரான குணால் காமராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதில் ‘தனது போராட்டத்தை இழிவுபடுத்த விரும்பிய முட்டாள்’ என கூறியிருந்தார். அதற்கு குணால் ‘உங்களுக்கு ஏன் மத்திய அரசிடம் இருந்து ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது’ என கேள்வி எழுப்பினார்.

kangana ranaut
kangana ranaut

மேலும் கங்னவிடம் அனுராக் காஷ்யப், ஒரு உண்மையான மணிகர்ணிகா என உங்களை நீங்கள் நம்பினால் இந்தியா சீனா இடையே நடக்கும் எல்லை பிரச்சனையில் போரிடுமாறு கூறினார். அதற்கு கங்கனா நீங்கள் உருவகங்களை உண்மையாக எடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் ஏன் எவ்வளவு முட்டாளாக இருக்கிறீர்கள்?? என பதிவிட்டுள்ளார். மேலும் கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நான் ஒருபோதும் சண்டையை ஆரம்பிக்க மாட்டேன். முடிந்த வரை சண்டையை முடித்து தான் வைக்கிறேன். தவறு என் மீது நிரூபிக்கப்பட்டால் ட்விட்டரில் இருந்து விலகுவேன்’ என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here