நவராத்திரி பூஜையின் சிறப்பம்சங்கள் – ஆன்மீக விளக்கம்!!

0
நவராத்திரி
நவராத்திரி

நவராத்திரி என்பது இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடக்கூடிய விழா ஆகும். சிவ பெருமானை வேண்டுவதற்கு சிவராத்திரி கொண்டபாடப்படுவதைப் போல் தான் அம்மனை வழிபட இந்த நவராத்திரியை கொண்டாடுகிறோம். மேலும் நவராத்திரியின் அம்சங்கள் மற்றும் அதன் பெருமைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

நவராத்திரி

இந்த நவராத்திரி மைசூரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழ் நாட்டிலும் தூத்துக்குடியில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி 9 இரவுகள் என்று குறிப்பிடுகிறது. நவ என்பது ஒன்பது ஆகும். ராத்திரி என்பது இரவு. இந்த ஒன்பது இரவுகள் கொண்டாடப்படுவதே நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது ராத்திரியில் அம்பிகையை கொண்டாடும் விழா தான் நவராத்திரி திருவிழா.

நவராத்திரி
நவராத்திரி

மேலும் அம்பாள் மகிசாசூரனை வாதம் செய்ய இந்த ஒன்பது இரவுகள் தவம் மேற்கொண்ட காலம் தான் இந்த நவராத்திரி. இந்த விரதம் இருப்பதற்கான முக்கிய நோக்கமே நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களை  ஒன்று சேர்த்து தீய எண்ணங்களை முழுமையாக அளிப்பதே.

நவராத்திரி
நவராத்திரி

இந்த 9 இரவுகளில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதியை நாம் வழிபடுகிறோம். இந்த நவராத்திரியில் கடைசி நாள் விஜய தசமியாக கொண்டாடப்படுகிறது. ஏனெனில் நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை அழிக்க கூடிய சக்தி இந்த அம்பாளிடம் உள்ளது. அதனால் தான் அவர்களை தேவி என்றும் அழைக்கிறோம்.

நவராத்திரி
நவராத்திரி

முதல் மூன்று நாட்கள் நாம் துர்கா தேவியை வழிபடுகிறோம். இதனால் நமது எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நம் கர்ம வினை பயனும் அழிகிறது. புராண கதைகளில் அசுரனை போரில் வீழ்த்த துர்கா அவதாரமே தோன்றியது. எனவே நம்மில் இருக்கும் அசுரனை விரட்ட துர்கா தேவியின் அருள் நமக்கு தேவை.

நவராத்திரி
நவராத்திரி

அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியை வழிபடுகிறோம். வீட்டில் செல்வம் பெருகி சந்தோஷமான வாழ்க்கைக்கு இது வழிவகுக்கும். கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியை நாம் வழிபடுகிறோம். அதாவது நமது நல்லொழுக்கங்கள் வளர்க்க இந்த சரஸ்வதி வழிபாடு மிக முக்கியமாகும். மேலும் கடைசி நாளாக விஜயதசமி கொண்டாடுகிறோம். இது வெற்றியின் அடையாளம் ஆகும்.

நவராத்திரி
நவராத்திரி

முதலாவதாக நமது எதிர்மறை எண்ணங்களை அளிக்கிறோம், இரண்டாவதாக நமது நல்லொழுக்கங்களை வளர்க்கிறோம், மூன்றாவதாக நமது மனதை தூய்மைப்படுத்தி ஆன்மீக சிந்தனையில் ஈடுபடுத்துகிறோம். இதுவே நவராத்திரியின் சிறப்பாகும். மேலும் இந்த நவராத்திரி பூஜைகளில் நவ தானியங்களை நெய் வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். இது வரையிலும் புரட்டாசி விரதத்தை கடைபிடித்த நமக்கு இந்த நவ தானியங்களை பிரசாதமாக எடுத்துக் கொள்வதால் உடலில் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here