Tuesday, April 23, 2024

நீட் தேர்வு 2020 முடிவுகளில் குளறுபடி – இணையத்தில் இருந்து நீக்கம்!!

Must Read

நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன.

நீட் தேர்வு:

இந்தியாவில் மருத்துவ நுழைவுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான தேர்வு, நீட். இந்த ஆண்டு பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. மொத்தமாக, இந்தியாவில் இந்த தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. கொரோனா காரணமாக பல மாணவர்களால் தேர்வினை எழுத முடியவில்லை அதனால் அவர்கள் அனைவரும் 17 ஆம் தேதி தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று மாலை 5.30 மணி வாக்கில் நீட் முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஆரம்பத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டது. பின், ஒரு வழியாக சரிசெய்யப்பட்டு தேர்வு முடிவுகள் பார்க்கப்பட்டன. தற்போது தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

NEET 2020 exam results to be declared shortly - Oneindia News

நீட் முகமை சார்பில் மாநிலம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் தேர்வு எழுதியோர், தேர்ச்சி பெற்றோர், கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டிற்கான தேர்ச்சி விகிதம் ஒப்பிட்டு கூறப்பட்டது.

தேர்வு முடிவுகளில் குழப்பம்:

அதில் பல குளறுபடிகள் இருந்தது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது திரிபுரா மாநிலம் தான். திரிபுரா மாநிலத்தில் மொத்தமாக தேர்வு எழுதியவர்களே 3536 தான். ஆனால், 88889 பேர் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது மட்டும் அல்லாமல் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் 12047 மாணவர்கள் தான். ஆனால், 37301 பேர் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

பாரதியிடம் தன் காதலை கூறிய வெண்பா – ஏற்றுக் கொள்வாரா பாரதி?? ஷாக்கான ரசிகர்கள்!!

confusion in neet result
confusion in neet result

இத்துடன் தெலுங்கானா மாநிலத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 54872. தேர்வினை எழுதியவர்கள் 50392 பேர், இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 1738 ஆனால், தேர்ச்சி விகிதம் 49.15 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது போன்ற குளறுபடிகளால் அனைவரும் குழப்பம் அடைத்தனர். இதனை அறிந்த நீட் முகமை உடனடியாக இந்த பட்டியலை இணையத்தளத்தில் இருந்து நீக்கியது. இது அனைவர் மத்தியிலும் சர்ச்சைக்குரிய விவகாரமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -