தேசிய ஸ்குவாஷ் போட்டி.., வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை.., குவியும் பாராட்டுக்கள்!!

0

சிறுவர்களுக்கான தேசிய ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஷமீனா ரியாஸ்

இந்தியாவின் மும்பை மாநிலத்தில் சிறுவர்களுக்கான தேசிய ஸ்குவாஷ் போட்டி அரங்கேறியது. இதில் தமிழ்நாடு, குஜராத், உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அதன்படி இந்த போட்டியில் தமிழக வீராங்கனையான ஷமீனா ரியாஸ் அதிரடியாக விளையாடி அரையிறுதி வரை முன்னேறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஷமீனா, இவனா குப்தாவை எதிர்கொண்டார். இதில் 5-11, 3-11, 5-11 என்ற நேர் செட் கணக்கில் ஷமீனா கடுமையான தோல்வியை சந்தித்தார். இதனால் அவர் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவற விட்டார். இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here