அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு.,, முழு விபரம் உள்ளே!

0
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு.,, முழு விபரம் உள்ளே!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு.,, முழு விபரம் உள்ளே!

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து, ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவைக் கண்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய வர்த்தக நிலவரம் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ரூபாயின் மதிப்பு:

கொரோனா வருகையால் ஏற்பட்ட பணவீக்கம், உக்ரைன் ரஷ்யா தாக்குதல் போன்ற சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இதை மையமாக வைத்து சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது. இதையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் அதிகரித்து 82.62 ஆக இருந்தது.

மேலும் வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், டாலருக்கு எதிராக உள்நாட்டு அலகு 82.71 ஆகத் தொடங்கியது, பின்னர் அதன் முந்தைய முடிவை விட 26 பைசா அதிகரித்து 82.62 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளியன்று முந்தைய அமர்வில், டாலருக்கு எதிராக ரூபாய் 9 காசுகள் சரிந்து 82.88 ஆக இருந்தது. மேலும் தீபாவளியை முன்னிட்டு அந்நிய செலாவணி சந்தை நேற்று மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here