வாட்ஸ்அப் சேவை திடீர் நிறுத்தம்.,, நிறுவனம் வெளியிட்ட புதிய தகவல்!!

0
வாட்ஸ்அப் சேவை திடீர் நிறுத்தம்.,, அவதிக்குள்ளான பயணிகள்!!
வாட்ஸ்அப் சேவை திடீர் நிறுத்தம்.,, அவதிக்குள்ளான பயணிகள்!!

உலகின் சில பகுதிகளில் வாட்ஸ்அப் ஆப்களின் செயல்பாடுகளில் தடை ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்:

அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி நம்பிக்கையான தகவல் தொடர்பு வலைத்தளமாக உள்ளது. வாட்ஸ் ஆப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களை கவரும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வந்தது. இதுமட்டுமல்லாமல் வாட்ஸ் ஆப் நிறுவனம் பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது குறித்து வாட்ஸ்அப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான பதில் அல்லது ஒப்புதல் எதுவும் வரவில்லை. இருப்பினும் வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜ் அனுபவத்திலும் அல்லது பெறுவதிலும் சிக்கல்களை எதிர் கொள்வதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் Real Time Monitor Downdetector இன் கூற்றுப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11,000 பயனர்கள் இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு.,, முழு விபரம் உள்ளே!

இதையடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு WhatsApp வேலை செய்யவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது குறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் கூறியது, WhatsApp பயனர்  சிலருக்கு மெசேஜ் அனுப்புவதிலும், பெறுவதிலும் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், மேலும் அனைவருக்கும் வாட்ஸ்அப்பை விரைவில் மீட்டமைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here