T20 WC 2022: முதல் வெற்றியை பெறுமா நடப்பு சாம்பியன்?? இலங்கைக்கு எதிராக இன்று மோதல்!!

0

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியானது, டி20 உலக கோப்பையின் தனது முதல் வெற்றியை ருசிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இன்று இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

AUS vs SL:

டி20 உலக கோப்பையின் எட்டாவது சீசன் சூடுபிடிக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணியானது இலங்கை அணியை எதிர்த்து இன்று ஓப்ட்ஸ் ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளது. இதில் ஆஸ்திரேலியா, இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். இந்த ஏமாற்றத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில், இன்று இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது வெற்றி எண்ணிக்கையை தொடங்கும் முன்னைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போல, இலங்கை அணியும் வெற்றிக்காக போராட கூடும்.

தேசிய ஸ்குவாஷ் போட்டி.., வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை.., குவியும் பாராட்டுக்கள்!!

இந்த போட்டி நடைபெறும் நேரத்தில், மணிக்கு 24 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், வானம் ஓரளவு மேகமூட்டத்துடனே இருக்கும். ஆனால், மழைக்கு வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த போட்டி நடைபெறும் மைதானமானது, பவுன்ஸ் மற்றும் பேட்டிங்க்கு அதிக சாதகமானது. இதனால், இன்று எந்த அணி டாஸ் வெல்லுமோ முதலில், பவுலிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here