இன்று கடைசி சூரிய கிரகணம்.,, ரொம்ப உஷாரா இருக்கணும்,, இதெல்லாம் செய்யக்கூடாது!!

0

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளதாக அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சூரிய கிரகணம்:

வருடம் தோறும் சராசரியாக 4 கிரகணங்கள் தோன்றும். அதாவது சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று (அக்டோபர் 25-ஆம் தேதி) பகுதி சூரிய கிரகணம் மாலையில் நிகழ உள்ளது. அதாவது அமாவாசை நாளில் தான் இந்த சூரிய கிரகணம் நிகழும். எனவே இந்த கிரகண நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் பார்க்க கூடாது, binoculars அல்லது filmstrips கொண்டு பார்க்க கூடாது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் ஸ்பெஷல் கிளாஸ்களை அணிந்து பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் அறிவுரை வழங்கியுள்ளார். இன்றைய தினம் நிகழ உள்ள சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு நாடுகள், மேற்கு ஆசியா பகுதிகளில் தென்பட உள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் மாலை 4.29 மணிக்கு தொடங்கி 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தென்படும். மேலும் தமிழகத்தில் சென்னையில் மாலை 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சென்னை, கோவை, மங்களூரு, ஊட்டி, ஹைதராபாத், வாரணாசி, விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், கான்பூர், லக்னோ, நாக்பூர் ஆகிய நகரங்களில் 1 மணி நேரத்திற்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும். எனவே இந்த கிரகண நேரத்தில் சுப காரியங்கள் நிறுத்திவைக்கப்படும், கர்ப்பிணிகள் வெளியில் செல்லக்கூடாது , உணவு சாப்பிடக் கூடாது , வெயிட் அதிகமான பொருட்களை தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here