Monday, April 29, 2024

சிறுவியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கும் “ஸ்வநிதி” திட்டம் – பிரதமர் துவக்கி வைப்பு!!

Must Read

3 லட்சத்திற்கும் அதிகமான சிறு வியாபாரிகள் கடன் பெரும் திட்டமான “ஸ்வநிதி” கடன் உதவி திட்டத்தினை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.

மத்திய அரசின் திட்டம்:

நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு பயன் அளிக்கும் வகையிலும் அவர்கள் தங்களது வியாபாரத்தை பெருக்கவும் மத்திய அரசு சார்பில் பல திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான “ஸ்வநிதி” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த திட்டம் மூலமாக நாட்டிலுள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான சிறு வியாபாரிகள் பயனடைவர் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கான அறிமுக விழா இன்று நடைபெற்றது. டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி.

பிரதமர் துவக்கி வைப்பு:

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் அதிகபட்சமாக 50 லட்ச சாலையோர வியாபாரிகளுக்கு பயனளிக்கும் வகையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் முறையாக கடன் தொகையினை சரியான நேரத்தில் கட்டினால் அவர்களுக்கு 7 சதவீத வருடாந்திர வட்டியும் மானியமும் வழங்கப்படும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மானியம் பயனரின் வங்கி கணக்கில் ஆண்டிற்கு ஒரு முறை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக கடன் பெற விரும்பினால் இணையதளம் அல்லது மொபைல் செயலி வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

டிஜிட்டல் முறை மூலமாக பயனர் பணப்பரிவர்த்தனை செய்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகையாக 100 ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். பின், இந்த திட்டம் மூலமாக பயனடைந்தவர்களிடம் கலந்துரையாடினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -