காதலிக்கு முத்தம் குடுக்கும் போட்டோவை பதிவிட்ட விஷ்ணு விஷால் – கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!!

0
vishnu vishal

தமிழில் பிரபல நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் பற்றிய செய்திகளே சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. ஏனெனில் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை விவாகரத்து செய்தது மட்டுமல்லாமல் ஜுவாலா குட்டா என்பவரை காதலித்து வருகிறார். தற்போது எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

விஷ்ணு விஷால்

தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார். கபடிக்காக தனது உயிரையே தியாகம் செய்திருப்பார். இது பலரையும் கண்கலங்க வைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

vishnu vishal
vishnu vishal

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என செம ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மேலும் இவர் ரஜினி என்பவரை சில வருடங்களாக காதலித்து திருமணமும் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார்.

vishnu vishal
vishnu vishal

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஏனெனில் படங்களில் இயற்கையாக நடிப்பதற்காக நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார் விஷ்ணு. இதனால் இவர்களுக்கு இடையே பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எனவே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

vishnu-vishal

தற்போது பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டவை காதலித்து வருகிறார் விஷ்ணு விஷால். தொடர்ந்து இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். பலரும் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். ஆனால் எதையும் காதில் வாங்காத விஷ்ணு விஷால் தற்போது இருவரும் அதிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது முதல் மனைவியை வெறுப்பேற்ற இப்படி செய்கிறாரா? என்று பலரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here