இந்தியாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஹார்லி டேவிட்சன் – பைக் பிரியர்கள் உற்சாகம்!!

0

பைக் சந்தையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறியது. இதனால் பைக் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் இன்று ஹார்லி-டேவிட்சனுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. அதன்படி இந்திய மார்க்கெட்டில், ஹார்லி பைக்குகளை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்ய உள்ளது.

ஹார்லி டேவிட்சன்:

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய்யும் உரிமம் மற்றும் பாகங்கள், கியர் உடைகள் என அனைதையும் இந்தியாவில் தற்போதுள்ள ஹீரோவின் டீலர்ஷிப் நெட்வொர்க் மூலம் செய்யப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹீரோ மோட்டோகார்ப் ஹார்லி-டேவிட்சன் பிராண்ட் பெயரில் பல வகையான பிரீமியம் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல இளைஞர்களின் வாழ்நாள் லட்சியமாக இருக்கும் ஹார்லி டேவிட்சன் பைக் இந்திய மார்க்கெட்டில் மீண்டும் நுழைந்துள்ளது பைக் பிரியர்களை உற்சாகமடைய செய்துள்ளது. இது ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்திய மார்க்கெட்டில் நுழைந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக விலை கொண்ட இரு சக்கர வாகன சந்தையான இந்தியாவில், ஹார்லி டேவிட்சன் நிறுவன விற்பனை வெகுவாக குறைந்தது. இதற்கு அதன் விலை மற்றும் பராமரிப்பு செலவுகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த காலகட்டத்தில் விற்பனை 4,708 யூனிட்டுகளிலிருந்து 2,470 யூனிட்டுகளாக குறைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here