Saturday, May 18, 2024

இன்றைய தலைப்புச் செய்திகளின் சுருக்கம் – மறக்காம படிங்க!!

Must Read

தேசிய செய்திகள்:

  1. அரசுத் துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கு தங்களது குழந்தைகளை பராமரிக்க அரசு ஊதியத்துடன் விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டதாகவும், மக்களை இது போதுமான அளவு சென்றடையவில்லை என்றும் தெரிவித்தார்.
  2. ஊரடங்கு காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாத தவணைக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை ஒத்திவைக்கப்பட்ட EMI தொகைகளுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. நவம்பர் 23 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வளாக கல்வி நடைபெறும் என்று குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  4. இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற வேண்டும் என்று தேர்தல் தலைமை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

மாநில செய்திகள்:

  1. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நலன் நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வருவதாக மருத்துவர் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்க்கு தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை திறம்பட நடத்த 5 குழுக்களை தமிழக அரசு நியமித்துள்ளது. நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு என்று அந்த ஐந்து குழுக்களும் பெயரிடப்பட்டுள்ளன.
  3. தீபாவளி பண்டிகை நெருங்க உள்ள நிலையில் வட மாநிலங்களில் ஏற்படும் கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் வரத்து அதிகளாவில் குறைந்துள்ளது. இதனால் அடுத்த மாதம் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

வணிக செய்திகள்:

  1. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து 38,296 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 64 ரூபாய் உயர்ந்து 4,787 என்று விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.70 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,700 என்றும் விற்கப்படுகிறது.
  2. தமிழகத்தில் தொடர்ந்து 26வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த வித மாற்றமுமின்றி ஒரே விலை நிலவரத்துடன் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 84.14 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒரு லிட்டர் டீசல் 75.95 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வானிலை ரிப்போர்ட்:

  1. அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் வறண்ட வானிலையுடனும், தென் தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

பிற செய்திகள்:

  1. அடுத்த மாதம் வர இருக்கும் தீபாவளி பண்டிகையினை அடுத்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளார். மாநில அரசின் கீழ் வேலை பார்க்கும் “பி” மற்றும் “சி” பிரிவினருக்கு போனஸ் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  2. 3 லட்சத்திற்கும் அதிகமான சிறு வியாபாரிகள் கடன் பெரும் திட்டமான “ஸ்வநிதி” கடன் உதவி திட்டத்தினை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி வியாபாரிகளுடன் கலந்துரையாடினார்.
  3. பல் மருத்துவத்திற்காக முதுகலை படிப்பின் சேர்க்கைக்கு வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் என்று தேசிய கல்வி முகமை தெரிவித்துள்ளது. இளநிலை MBBS படிப்பிற்கான தேர்வுகள் சமீபத்தில் முடிந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -