பாஜகவிற்கு நாட்டு வளர்ச்சி முக்கியம், திமுக காங்கிரசுக்கு குடும்பம் வளர்ச்சி முக்கியம் – மோடி விமர்சனம்!!

0

தாராபுரத்தில் தேர்தல் பிரச்சார உரையை துவக்கினார் நரேந்திர மோடி. தற்போது பேசிய அவர் எதிர்கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நரேந்திர மோடி

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தமிழகத்தில் அரசியல் களம் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. இதனை மேலும் பரபரப்பாக வகையில் தற்போது பிரச்சாரத்திற்காக நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தற்போது தாராபுரத்திற்கு வந்துள்ளார். இங்கு வந்த அவர் பிரச்சார கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கு வந்த அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீசெல்வம் ஆகியோர் வரவேற்றனர். தற்போது இந்த பொதுக்கூட்டத்தில் வெற்றி வேல் என்று தமிழில் கூறிய படி தனது உரையை துவக்கினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது பேசிய அவர் தொடக்கத்தில் இருந்தே திமுக மற்றும் காங்கிரசை தொடர்ந்து விமர்சித்தார்.

எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா??நீதிபதி ஆவேசம்!!

ஏற்கனவே தமிழக முதல்வர் திமுக குடும்ப அரசியல் செய்கிறது என்று விமர்சித்தார். இவரை தொடர்ந்து தற்போது மோடியும் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “பாஜகவிற்கு நாட்டுடைய வளர்ச்சி தான் முக்கியம். ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப வளர்ச்சி தான் முக்கியம். மேலும் திமுக எம்பி ஆ.ராசா முதல்வரின் தயார் பற்றி விமர்சித்தது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார் மோடி. மேலும் திமுக கட்சி பட்டது இளவரசர்களுக்காக முக்கிய தலைவர்களை ஓரம் காட்டுகிறது” என்றும் குற்றம் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here