எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா??நீதிபதி ஆவேசம்!!

0

பிரபல திரைப்பட நகைச்சுவையாளர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சையான கருத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். தற்போது இதுகுறித்து எஸ்.வி.சேகரை நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.

எஸ்.வி.சேகர்

கடந்த 1974ம் ஆண்டு முதல் தனது திரைப்பட பயணத்தை துவக்கியவர் தான் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர். இவரது நகைச்சுவை அனைத்தும் முந்தைய கலங்களில் மக்களால் வெகுவாக கவரப்பட்டது. சினிமாவில் கலக்கிய இவர் பின்பு அரசியலிலும் குதித்தார். அதன்படி கடந்த 2006ம், ஆண்டில் மைலாப்பூர் தொகுதியில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எஸ்.வி.சேகர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பின்பு இவர் பல சர்ச்சைக்குரிய கருத்தை அவ்வப்போது தெரிவித்து வருவார். அது பல சர்ச்சைகளை கிளப்பும். அதில் ஒன்று தான் இவர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்து கடும் சர்ச்சைக்குள்ளான கருத்தை பகிர்ந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதன் அடிப்படையில் இவர் மீது வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்பு கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

திருப்பூரில் பிரதமர் மோடி பிரச்சாரம் – உற்சாகத்தில் தொண்டர்கள்!!

இருந்தும் கூட இவரை போலீசார் கைது செய்யாமல் இவர் செல்லும் விழாக்களுக்கு பாதுகாப்பாகவே சென்றனர். மேலும் இந்த வழக்கை ரத்து செய்யக்கூறி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தை நாடினர். தற்போது இதனை விசாரித்த நீதிபதி கடும் ஆவேசத்திற்கு உள்ளானார். நீதிபதி கூறியதாவது, எஸ்.வி.சேகர் என்ன எழுத படிக்க தெரியாதவரா?முகநூலில் வந்தவற்றை பார்க்காமல் பகிர்வதற்கு. சமுதாயத்தை மதிக்க தெரியாத இவர் எப்படி முக்கிய பிரமுகர் ஆக முடியும்? என்று நீதிபதி கடுமையாக விளாசியுள்ளார். இதுகுறித்து காவல்துறை பதில்தர கூறி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை வருகிற 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here