சன் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல் – ஷாக்கான ரசிகர்கள்!!

0

சன் டிவியில் மதிய நேர ஒளிபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘அக்னி நட்சத்திரம்’. இந்த தொடர் தற்போது முடிவுக்கு வர உள்ளது. இந்த தகவலினால் சீரியல் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.

சன் டிவி சீரியல்

ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனங்களும் அதிகம் சம்பாதித்து வருவது அதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மூலம் தான். ஒரு வீட்டில் காலையில் டிவியை ஆன் செய்தால் அது இரவு வரை ஓடிக்கொண்டே இருக்கும். அதுவும் வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளுக்கு சிறந்த பொழுதுபோக்காக இருந்து வருகிறது டிவி சீரியல். அந்த வகையில் ஒளிபரப்படும் தொடர்களில் சன் தொலைக்காட்சி தான் அதிகளவு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முந்தைய காலம் போல் அல்லாது ரசிகர்களின் விருப்பத்தை அறிந்து அவர்களது ரசனைக்கேற்றபடி சீரியல்கள் தற்போது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அந்த வகையில் சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் அக்னி நட்சத்திரம் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் வசந்த், காயத்ரி, வர்ஷினி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை – வானிலை மையம் தகவல்!!

தன் கூட பிறந்தவள் என்று தெரியாமல் பிரிந்துள்ள சகோதரிகள் இருவரும் ஒரே ஆண் மீது காதல் கொள்ளுகிறார்கள். அதில் ஒருவர் நாயகனை மணமுடிக்க மற்றொருவர் அந்த பந்தத்தை உடைக்க முயற்சி செய்கிறார். இது தான் அக்னி நட்சத்திரம் சீரியலின் கதைக்களம். இந்த தொடரின் திடீர் முடிவால் அக்னி நட்சத்திரம் சீரியல் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here