1 வருடத்தில் ரூ.802 கோடி வருமானம் ஈட்டிய டென்னிஸ் வீராங்கனைகள் – பட்டியல் வெளியீடு.!

0

‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டு தோறும் வெளியிடும் அதிகம் வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி முதல் 2020-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி அதிகம் சம்பாதித்த வீராங்கனைகள் பட்டியலில் 2 டென்னிஸ் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

வருமானம்

அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ வணிக இதழ் ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதில், 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முதல்முறையாக முதலிடம் பெற்றுள்ளார். அவர் ஓராண்டில் 802 கொடிகளை குவித்துள்ளார்.

2-வது இடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரரும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ உள்ளார்.

ரொனால்டோவுக்கு 4 கோல்கள்: ரியல் ...

அவரது ஓராண்டு சம்பாத்தியம் ரூ.792 கோடியாகும். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி ரூ.784 கோடியுடன் 3-வது இடத்திலும், பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ரூ.720 கோடியுடன் 4-வது இடத்திலும், அமெரிக்க கூடைப்பந்து வீரர் லிப்ரோன் ஜேம்ஸ் ரூ.666 கோடியுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

டென்னிஸ் வீராங்கனை

100 பேர் கொண்ட பட்டியலில் வீராங்கனைகளில் முதலிடம் பிடித்தவர், ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. ஒட்டுமொத்தப் பட்டியலில் அவருக்கு 29-வது இடமே கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்த மற்றொரு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அவருக்கு 33-வது இடம். இதற்கு முன்பு கடந்த 2016-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸும் மரியா ஷரபோவாவும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தார்கள்.

Coronavirus: Tennis star Serena Williams, husband Alexis Ohanian ...

1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை ஒசாகா தாண்டியுள்ளார்.

Serena Williams Loses In U.S. Open Final to Bianca Andreescu | Time

கடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37) நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்தார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ 207 கோடி ($29.2 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.

விராட்கோலி

என்னால் தொடர்ந்து விளையாட ...

100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்திய வீரர், விராட் கோலி. கடந்த ஒரு வருடத்தில் ரூ. 196 கோடி சம்பாதித்து 66-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 100-வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் இந்த வருடம் முன்னேற்றம் அடைந்துள்ளார். எனினும் இந்திய வீராங்கனைகள் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here