வறுத்து அரைத்த ‘மட்டன் சுக்கா’ ரெசிபி – செஞ்சு அசத்துங்க!!

0
mutton curry
mutton curry

மட்டன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு தனி குஷி தான். மேலும் மட்டனில் சிக்கனை விட அதிக சத்துக்களும் உள்ளன. இந்த பதிவில் அனைவருக்கும் பிடித்தமான வகையில் வறுத்து அரைத்த மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

Spicy-Mutton-Curry-Ingredients-300x175
Spicy-Mutton-Curry-Ingredients
  • மட்டன் – 1/2 கி
  • தக்காளி – 1
  • வெங்காயம் – 2
  • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • மல்லி – தேக்கரண்டி
  • சீரகம் – தேக்கரண்டி
  • பட்டை – சிறிது
  • காய்ந்த மிளகாய் – 4
  • சோம்பு – தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 1/4 கிலோ

செய்முறை

முதலில் மட்டனை நன்கு கழுவி அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வரும்வரை வைத்து கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மல்லி, சீரகம், மிளகு, பட்டை, காய்ந்த மிளகாய் போன்றவற்றை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Mutton-Curry
Mutton-Curry

அதன் பின் அதனை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். இப்பொழுது மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சின்னவெங்காயத்தை முழுசாக போட்டு வதக்கவும். அதன் பின் 3 பச்சைமிளகாவை சேர்க்கவும்.

இப்பொழுது பொன்னிறமாகும் வரை வதக்கிவிட்டு வேகவைத்த மட்டனை அந்த தண்ணீரோடு சேர்க்கவும். அதன் பின் அரைத்து வைத்த மசாலாவையும் அதில் சேர்க்கவும். இப்பொழுது அடிபிடிக்காமல் நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். மட்டன் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் மட்டன் சுக்கா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here