மெல்போர்னில் 2வது முறையாக பொறிக்கப்படும் ரஹானேவின் பெயர்- குவியும் வாழ்த்துக்கள்!!

0

ஆஸ்திரேலியாவின் வரலாற்று புகழ் மிக்க மைதானமான மெல்போர்ன் மைதானத்தில் தற்போதைய இந்தியா அணியின் கேப்டன் ரஹானேவின் பெயர் இரண்டாவது முறையாக பொறிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஹானேவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மெல்போர்ன்: 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி புகழ் பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. மேலும் இதனை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைத்தனர். அந்த போட்டியில் தற்காலிகமாக ரஹானே இந்தியா அணியை வழிநடத்தினார். ரஹானேவின் கேப்டன்சி இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக இருந்தது. மேலும் ஒரு வீரராகவும் அவர் மிக சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

100 ஆண்டு காலம் புகழ் பெற்றது மெல்போர்ன் மைதானம். இந்த மைதானத்தில் வைத்து நடக்கும் போட்டிகளில் எந்த வீரர் சதம் அடித்தாரோ மற்றும் எந்த வீரர் 5 விக்கெட்களை வீழ்த்துதரோ அவர்களின் பெயர் மைதானத்தில் பொறிக்கப்படும். இது வரை இந்தியா அணியின் சில வீரர்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வினு மன்கட், சுனில் கவாஸ்கர்,குண்டப்பா விஸ்வநாத், சச்சின் டெண்டுல்கர், சேவாக் ரஹானே, விராட் கோஹ்லி மற்றும் புஜாராவின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக இந்தியா அணியின் வீரர் ரஹானேவின் பெயர் பொறிக்கப்பட்டு சிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டில் அவர் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என ரஜினி மன உளைச்சலில் உள்ளார்’ – அர்ஜுனன் மூர்த்தி பேட்டி!!

இரண்டாவது போட்டியில் சதம் அடித்து வெற்றிக்கு உதவிய ரஹானே ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதிலும் ஓர் சிறப்பான விஷயம் உள்ளது. 1868ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பூர்விகக் குடிகள் சார்பில் ஓர் கிரிக்கெட் அணி ஜானு முஸ்லக் என்பவர் தலைமையில் உருவாக்க பட்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. வெளிநாடுகளுக்கு விளையாட சென்ற முதல் ஆஸ்திரேலியா அணி என்பதால் அந்த வீரர்களின் புகைப்படம் புரிந்த பதக்கத்தை ஆட்டநாயகன் விருதாக வழங்குகின்றனர். மேலும் இது ரஹானேவிற்கு ஆட்டநாயகன் விருதாக வழங்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பழங்குடியினரை கௌரவிக்கும் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான விடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. மேலும் பிசிசிஐ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here