சுவையான “மஸ்ரூம் மசாலா கிரேவி” – வீட்டில் செஞ்சு பாருங்க!!

0

சிலருக்கு அசைவம் பிடிக்காத காரணத்தால் காளானில் செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். காளானை வைத்து ஈஸியான ரெசிபிக்களை நாமே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்து விடலாம். அந்த வகையில் இன்று “காளான் மசாலா கிரேவி” குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • காளான் – 400 கிராம்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை – 2
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 2
  • பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 2 (கீறி வைத்தது)
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • தக்காளி – 3
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • சீரகம் தூள் – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – க்ரானிஷ் செய்ய (பொடியாக நறுக்கியது)

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தை சிறிது எண்ணெயுடன் சூடாக்கி, மேற்குறிய மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். இது நன்றாக வதங்கியதும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

‘ஜெயலலிதாவை விட இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் அதிக ஊழல் நடந்துள்ளது’ – ஸ்டாலின் பளிச் பேட்டி!!

இந்த கலவை நன்றாக வதங்கியதும், அதில் உப்பு, மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, தக்காளி மென்மையாகவும், நன்கு சமைக்கப்படும் வரை சமைக்கவும். கடைசியாக, காளான் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து இந்த கலவையினை மூடி 10 நிமிடங்கள் சமைக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இறுதியாக கரம் மசாலா, கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கிண்டி விடவும். இந்த காளான் மசாலா கிரேவியை ரோட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும். அவ்ளோ தான்!!

சூடான & ஈஸியான “காளான் மசாலா கிரேவி” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here