‘முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை குறைக்க முடியாது’ – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்ததை குறைக்க வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்தார். தற்போது இந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

முல்லை பெரியாறு:

கடந்த 2018ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 130 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த ரசூல்ராய் வழக்கை தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அணையால் மக்களுக்கு பிரச்சனைகள் ஏதும் வராத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு துணை குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆகியவை ஒன்று சேர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் நீர்மட்டத்தை குறைக்குமாறு தொடர்ந்த வழக்கு குறித்து தமிழக அரசை பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது, கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு தமிழக அரசும் ஒரு காரணம் என்று தெரிவித்தனர் ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் முல்லை பெரியாறு உபரி நீரை திறந்து விடுவதற்கு முன்பாகவே இடுக்கி அணையில் இருந்து கேரள அரசு நீரை திறந்து விட்டது. இதுவே வெள்ள பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று கூறினார். இத்தனை கேரளா அரசும் வழக்கு தொடர்ந்த நபரும் எதிர்த்தனர்.

#INDvsENG இரண்டாவது டெஸ்ட் நாளை துவக்கம் – பதிலடி கொடுக்குமா இந்தியா??

தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைத்து விட முடியாது, அதில் எந்த முகாந்திரமும் இல்லை. 2018ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு இடைகாலமாக அணையின் நீர்மட்டத்தை குறைத்ததே காரணம் என்று நீதிபதிகள் கூறினார்கள். மேலும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் காலாவதி ஆகிவிட்டது என்று கூறி மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here