#INDvsENG இரண்டாவது டெஸ்ட் நாளை துவக்கம் – பதிலடி கொடுக்குமா இந்தியா??

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினருக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை மைதானத்தில் வைத்து துவங்குகிறது. இந்த போட்டி நாளை காலை 9.30 மணி அளவில் தொடங்கவுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட இங்கிலாந்து அணி முதலாவதாக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடத்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய இந்தியா அணியின் ரோஹித் மற்றும் ரஹானே இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் கட்டாயத்தில் உள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் சுந்தர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குலதீப் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறவேண்டும் என்றால் இந்தியா இந்த தொடரை கட்டாயமாக வெல்ல வேண்டும். இது இந்தியா அணியினருக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

நாளை துவக்கம்:

மேலும் நாளைய போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறுகின்றனர். இங்கிலாந்து அணி தரப்பில் வீரர்கள் அனைவரும் சிறப்பான பார்மில் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இங்கிலாந்து கேப்டன் ரூட் இந்தியா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் அதிரடி ஆட்டக்காரர்கள் சிப்லே மற்றும் ஸ்டோக்ஸ் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர். தற்போது இங்கிலாந்து அணியின் கீப்பர் பட்லருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி சேனலுக்கு சீன அரசு தடை – அமெரிக்கா கண்டனம்!!

எனவே நாளைய போட்டியில் கீப்பராக போகஸ் செயல்படுவார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தினால் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் எனவே நாளைய போட்டியில் அவருக்கு பதில் பிராட் அல்லது வோக்ஸ் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த இரு அணிகள் விளையாடிய 123 டெஸ்ட் போட்டியில் இந்தியா 26 மற்றும் இங்கிலாந்து 48 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். 49 போட்டி டிராவில் முடிந்துள்ளது. தற்போது நாளைய போட்டி சென்னை மைதானத்தில் வைத்து காலை 9.30 மணி அளவில் துவங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here