இணையத்தில் வெளியான தளபதி 65 தோற்றம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

0

நடிகர் விஜய் நடித்துவரும் 65வது படத்திற்கான போட்டோஷூட் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தளபதி 65ல் விஜய் நடிக்கும் தோற்றம் தற்போது இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

தளபதி 65 தோற்றம்

பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றாலே அது வெளிவரும் வரை படத்திற்கான சில ரகசியங்கள் பாதுகாக்கப்பட்டு வரும். ஆனால் இந்த இணைய காலத்தில் எந்தவொரு விஷயங்களும் ரகசியமாக வைத்திருக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதிலும் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அது இணையதளத்தில் வெளியாகி விடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வரிசையில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65க்கான அவரது தோற்றம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 64 வது படமாக ‘மாஸ்டர்’ வெளியாகியுள்ளது. தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 65 வது திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

லட்சுமியின் கதறலில் கண்முழிக்கும் கண்ணம்மா – பாசப்போராட்டங்களுடன் பாரதி கண்ணம்மா!!

தொடர்ந்து இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக இணையதளத்தில் தகவல்கள் உலாவி வருகிறது. தற்போது நடிகர் விஜய் இப்படத்திற்கான டெஸ்ட் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு மூன்று விதமான கெட்டப்களில் போட்டோஷூட் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு தோற்றத்தில் மட்டுமே அவர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here