#INDvsENG இரண்டாவது டெஸ்ட் – 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் மாற்றம்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினருக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை மைதானத்தில் வைத்து துவங்குகிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணி பல மாற்றங்களை செய்துள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது நாளை தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளனர். இந்த போட்டி நாளை காலை 9.30 மணி அளவில் சென்னை மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. தற்போது இந்த போட்டிக்கு 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். முதல் போட்டியை போல் வெற்றியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணியும், இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்னும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கப்போவதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியினர் அனைவரும் மிக சிறப்பாக செயல்பட்டனர். இரண்டாவது போட்டியிலும் அதே அணி விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து அணி அதிரடியாக தனது அணியில் இருந்து 4 மாற்றங்களை செய்துள்ளது. காயம் காரணாமாக நாளைய போட்டியில் ஆர்ச்சர் பங்கேற்கமாட்டார். மேலும் கீப்பர் பட்லருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்டேர்சனும் நாளைய போட்டியில் பங்கேற்கமாட்டார். இவர்கள் இருவரும் 3வது போட்டியில் விளையாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

திருப்பதிக்கு ரயில் மூலம் ஒரு நாள் சுற்றுலா – மத்திய ரயில்வே அறிவிப்பு!!

மேலும் முதல் போட்டியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத பெஸ் இந்த போட்டியில் விளையாடப்போவதில்லை. தற்போது பட்லருக்கு பதில் ஃபோக்ஸ் கீப்பராக செயல்படவுள்ளார். மேலும் ஆர்ச்சர், ஆண்டர்சன் மற்றும் பெஸ்ஸிற்கு பதில் அணியில் பிராட், மெயின் அலி, ஒல்லி ஸ்டோன் மற்றும் க்றிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது இங்கிலாந்து அணி 12 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் வீரர்களின் பெயர் பட்டியல்:

பர்ன்ஸ், சிப்லே, லாரன்ஸ், ரூட்(C), ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ்(WC), லீச், மெயின் அலி, ஒல்லி ஸ்டோன், போப், பிராட், வோக்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here