அதிரடியாக சரிவை கண்ட தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் மக்கள்!!

0

சென்னையில் கடந்த 4 நாட்களாகவே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை நிலவரப்படி தற்போது மீண்டும் ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்:

கடந்த 1ம் தேதி ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆபரணதங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. சில தினங்களில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும் அதற்கு அடுத்த நாளே தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து விடுகிறது. இதனால் நகை வாங்க மக்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இன்று 4வது நாளாக தொடர்ந்து தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டுள்ளது. சில தினங்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இரக்கத்தை கண்டு வருவதால் முதலீட்டார்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இன்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இணையத்தில் வெளியான தளபதி 65 தோற்றம் – அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.464 அதிரடியாக குறைந்துள்ளது. இதன்மூலம் தற்போது 1 சவரன் ஆபரணத்தங்கம் ரூ.35,728 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 1 கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,466 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 1 கிராம் வெள்ளி தற்போது ரூ.73.30 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ கட்டி வெள்ளி தற்போது ரூ.73,300 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here