Sunday, May 5, 2024

முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் – இது தான் காரணம்!!

Must Read

முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானிக்கு செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தை பாதிப்பு அடைய கூடாது என்று பங்குகளை முறைகேடாக வாங்கியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி:

இண்டியன் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் தான், முகேஷ் அம்பானி. சமீப காலமாக அவரது சொத்து மதிப்பு அதிரடியாக உயர்ந்து வருகின்றது. அவர் தற்போது எண்ணை சுத்திகரிப்பு ஆலை, கியாஸ் ஆலை, ஜியோ டெலிபோன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதன் காரணமாக அவரது சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இவருக்கு இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் இந்திய பங்குசந்தைகளில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகளை தடுக்கின்றது. அதே போல் பங்குசந்தைகளில் நடைபெறும் மோசடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது பெட்ரோலிய நிறுவனம் பங்குச்சந்தை பாதிப்பின் காரணமாக வீழ்ச்சி அடைந்து விட கூடாது என்ற காரணத்திற்காக முறைகேடாக வாங்கி விற்பனை செய்துள்ளது. இது பங்குச்சந்தை வாரியத்தின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

‘2021 ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுகிறேன்’ – ஸ்டெய்ன் அதிரடி அறிவிப்பு!!

முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்ட காரணத்தால் தற்போது இந்த நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கூடுதலாக, ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடி ரூபாய் நவிமும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.20 கோடி மற்றும் மும்பை எஸ்.இ.எஸ் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -