‘2021 ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுகிறேன்’ – ஸ்டெய்ன் அதிரடி அறிவிப்பு!!

0

வரும் 2021ல் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் இருந்து தென் ஆப்ரிக்காவை சேர்ந்த வேக பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் விலகியுள்ளார். இது அவரது ரசிகர்கள் அனைவரையும் அதிரவித்துள்ளது. மேலும் அவர் அடுத்த ஆண்டு நடக்கும் போட்டியில் பங்கேற்க போவதாக கூறியுள்ளார்.

ஸ்டெய்ன்:

தென் ஆப்ரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளராக திகழ்பவர் ஸ்டெய்ன். இவர் ஒரு நாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தனது வேக பந்து வீச்சால் எதிரணி பேட்ஸ் மேன்களை மிரட்டுவார். இவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை வரலாற்றில் 10,000 பந்துக்கு மேல் வீசிய பந்து வீச்சாளர் என்ற சிறந்த சராசரியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2008 முதல் 2014ம் ஆண்டு வரை சர்வதேச டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளர் தரவரிசையில் இவர் முதல் இடத்தில் நீடித்து சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இவர் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் அந்த அணிக்காக சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவிகரமாக திகள்பவர். தற்போது இவர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது இவரது ரசிகர்கள் அனைவரையும் அதிரவைத்துள்ளது.

வருடத்தின் முதல் நாளே இப்படி காப்பி அடிப்பதா?? செல்வராகவனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக விளையாடுவதில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். மேலும் இந்த போட்டிகளில் வேறு எந்த அணிக்காகவும் நான் விளையாடப்போவதில்லை. அதே சமயம் நான் போட்டிகளில் இருந்து ஓய்வும் பெறவில்லை. அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் நான் விளையாடுவேன். இது தொடர்பான புரிதலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்திற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here