சீன நபர்களுக்கு, ஆன்லைன் கடன் செயலிகளுடன் தொடர்பு – காவல் ஆணையர் எச்சரிக்கை!!

0

தற்போது ஆன்லைன் மூலம் கடன் வழங்கி கடனை திரும்பி செலுத்த முடியாதவர்களை தொந்தரவு செய்து மற்றும் அவர்களின் போன் டேட்டாவை வெளியிடு செய்யப்போவதாக மிரட்டி பணம் பெற்று வருகிறார்கள் சில நபர்கள். மேலும் இந்த செயலில் சீனாவை சேர்ந்த 2 நபர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்று சென்னை காவல் அதிகாரி மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் செயலி:

சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவர் ஒருவர் தன்னால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியத நிலையில் தவித்து வந்தார். அதன்பிறகு கடன் வழங்கிய அந்த ஆன்லைன் நிறுவனம் அவரது போன் டேட்டாவை அவருக்கு தெரியாமல் எடுத்து அவரது போன் காண்டக்ட்டில் இருப்பவர்கள் அனைவர்க்கும் இவர் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர் என்று செய்தி அனுப்பியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அவரது உறவினர்கள் அந்த ஆன்லைன் செயலி மேல் நடவடிக்கை எடுக்குமாறு முற்றுகையிட்டனர். மேலும் இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி கூறுகையில் “ஆன்லைன் ஆப் மூலம் மக்கள் யாரும் கடன் பெற்று ஏமாற வேண்டாம்” என்று எச்சரித்துள்ளது. தற்போது சென்னை காவல் அதிகாரி மகேஷ் அகர்வால் ஆன்லைன் கடன் மோசடி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்தவர்களும் தொடர்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கின் சீனர்கள் இருவர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளன.

‘2021 ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுகிறேன்’ – ஸ்டெய்ன் அதிரடி அறிவிப்பு!!

மேலும் அவர்களிடம் இருந்து 2 வங்கி கணக்குகள் கைப்பற்றியுள்ளதாகவும் மேலும் பணம் எங்கெங்கு வழங்க பட்டிருக்கிறது என்று தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் ஆன்லைனில் வரும் ஆப் மூலம் கடன் பெறக்கூடாது என்றும் அவர்கள் நம் போனின் டேட்டாவை எடுத்து வைத்து நம்மால் பணம் செலுத்த முடியாத நிலையில் அவர்கள் அதனை பயன்படுத்தி மிரட்டி பணம் வசூலிப்பார்கள் என்று எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here