பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – மனஅழுத்தத்தை குறைக்க பிரதமர் மோடி உரை!!

0

இந்தியா முழுதும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக மாணவர்களுடன் உரையாட உள்ளார்.

பிரதமர் மோடி உரை

‘பரிக்ஷா பே சார்ச்சா 2021’ என்ற நிகழ்ச்சியின் மூலம் உலகெங்கிலும் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக உரையாட உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘துணிச்சல் மிக்க தேர்வெழுதும் போர்வீரர்கள், தேர்விற்கு தயாராகும் நிலையில், உலகெங்கும் உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் காணொளி வாயிலாக ‘பரிக்ஷா பே சார்ச்சா 2021′ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மன உளைச்சல் இல்லாமல் புன்னகையுடன் தேர்வை எதிர்கொள்வோம் வாருங்கள்!!’ என பதிவிட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், ‘பரிக்ஷா பே சார்ச்சா 2021′ நிகழ்ச்சியில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும், பெற்றோரும் கலந்து கொள்ளலாம். தீவிர தலைப்புகளுடன் வேடிக்கை நிறைந்த விவாதமாக இது அமையும். அதனால் மாணவ நண்பர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் இதில் கலந்து கொள்ள வாருங்கள்’ என ட்வீட் செய்துள்ளார் பிரதமர் மோடி. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, ‘ஆண்டுதோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் https://innovateindia.mygov.in/ppc-2021/ இந்த இணையதளம் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது கேள்விகளை அனுப்பலாம்.

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘எருமசானி’ ஹரிஜா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகள் நிகழ்ச்சியில் இடம்பெறும். முன்னதாக இந்த இணையதளத்தில் நடைபெறும் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்கள் மாநிலங்களிலிருந்து காணொளி மூலம் பிரதமருடன் கலந்துரையாடுவார்கள். மார்ச் 14ம் தேதி வரை நடக்கும் போட்டிகளில் இந்த இணையதள வாயிலாக மாணவர்கள் கலந்து கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here