தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு குறித்த அறிவிப்பினை முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதே போல் 11 வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்வு அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் கொரோனா பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படித்து வந்தனர். நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 8 மாதங்கள் முடிந்த நிலையில் தான் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்விற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிர்ப்பிற்கு பலர் வரவேற்பினை தெரிவித்தாலும் சிலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – மனஅழுத்தத்தை குறைக்க பிரதமர் மோடி உரை!!

இது இப்படியாக இருக்க, அடுத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் 11 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொது தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்விகளும் கேட்கப்பட்டது. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்விகள் வைக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து அவர் கூறியதாவது, “10 வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கான இறுதி அறிவிப்பினை தமிழக முதல்வர் பழனிசாமி தான் அறிவிப்பார். பொது தேர்வு நடத்துவது குறித்து அரசுத்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஆலோசித்து வருகிறார். 11 வகுப்பு பொது தேர்வு குறித்தும் அவர் கூடிய விரைவில் கூறுவார்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here