‘தனிநபர் உரிமைகள் பாதுகாப்பாக இருக்கும்’ – வாட்ஸ் ஆப் நிறுவனம் உறுதி!!

0

கடந்த மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனம் தனி மனிதர் உரிமைகள் பகிரப்படும் என்று அறிவித்தது. இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. தற்போது இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்:

தற்போதைய காலத்தில் வாட்ஸ் ஆப் செயலியை அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி தற்போது அனைவரிடமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்த செயலி பயனாளர்களின் தேவைகளை அறிந்து பல அம்சங்களை அமைத்து வருகிறது. இதனால் இந்த செயலி பயனாளர்கள் அனைவராலும் கவரப்பட்டது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப் நிறுவனம் ஓர் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் பயனாளர்கள் அனைவரும் இந்த செயலியை பயன்படுத்த அச்சமடைந்து வந்தனர். அந்த நிறுவனம் கூறியதாவது, பயனாளர்களின் தனிநபர் உரிமைகளை பேஸ்புக் போன்ற தளத்தில் பகிரப்படும் என்று அறிவித்தது. இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. மேலும் இந்த செயலியை பயனாளர்கள் பயன்படுத்துவதை குறைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து வழக்கும் தொடரப்பட்டது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தற்போது இந்த பிரச்னைகளை தடுக்கும் வகையில் வாட்ஸ் ஆப் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனாளர்களின் தனிநபர் உரிமைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் இருக்கும் என்று முடிவு செய்தது. மேலும் இதனை மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளது. தற்போது இதனால் பயனாளர்கள் அனைவரும் குஷி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here