அர்ஜுன் டெண்டுல்கரை திறமையை வைத்து தான் தேர்வு செய்தோம் – மும்பை இந்தியன்ஸ் விளக்கம்!!

0

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு தேர்வு செய்தது. தற்போது அவரை எதற்காக தேர்வு செய்தோம் என்பதை பற்றி அணியின் பயிற்சியாளர்கள் ஜாகீர் கான் மற்றும் ஜெயவர்தனே விளக்கியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்:

நேற்று சென்னையில் வைத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அவரது பெயரை ஏலத்தில் கடைசியாக அறிவித்தனர். இவரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. தற்போது இதனை சுட்டிக்காட்டி, வாரிசு அரசியலை தொடங்குகிறீர்களா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதற்கு பதில் அளிக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் ஜாகீர் கான் மற்றும் ஜெயவர்தனே இதுகுறித்து விளக்கியுள்ளனர். ஜாகீர் கான் கூறியதாவது, சச்சினின் மகன் என்ற அடிப்படையில் இவருக்கு பெரிய அழுத்தம் இருக்கும். ஆனால் அதனை அவர் வாழ்ந்து தான் ஆக வேண்டும். மேலும் இவரது பந்துவீச்சை நான் பார்த்திருக்கிறேன். இவர் மிக அருமையாக பந்துவீசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஏற்கனவே நான் பல நுணுக்கங்களை கற்றுக்கொடுத்திருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணி கண்டிப்பாக அவருக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

அஸ்வினுக்காக ஷிவாங்கி, சுனிதா செய்யும் தியாகம் – வேற லெவெலில் வெளியான ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

இதுகுறித்து ஜெயவர்தனே கூறியதாவது, தற்போது அர்ஜுன் அணியில் இணைவது மிக்க மகிழ்ச்சி. அவரை நாங்கள் சச்சினின் மகன் என்ற அடிப்படையில் தேர்வு செய்யவில்லை. அவரது திறமையை நன்கு அறிந்து தான் நாங்கள் அவரை தேர்வு செய்த்துள்ளோம். அவர் கடுமையான உழைப்பாளி. மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஐக்கிய அரபில் மிக கடுமையாக உழைத்தார். மேலும் மிக சிறப்பாக வலையில் பந்துவீசி வந்தார். இது அர்ஜுனுக்கு கற்றுக்கொள்ளும் நிலையாகும். இதற்கு உதவிகரமாக இருப்பதற்கு தான் நாங்கள் உள்ளோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here