அஸ்வினுக்காக ஷிவாங்கி, சுனிதா செய்யும் தியாகம் – வேற லெவெலில் வெளியான ‘குக் வித் கோமாளி’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. வாராவாரம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் இந்த இந்த நிகழ்ச்சியின் தற்போதைய ப்ரோமோ வேற லெவலில் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காகவே பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களும் அதிகமாகி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஷிவாங்கி, பாலா, புகழ் மற்றும் மணிமேகலை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிகழ்ச்சி. போன சீசனில் ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். அதே போல இந்த சீசனிலும் அஸ்வினுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் அஸ்வின், ஷிவாங்கி காம்போ வேற லெவல்.

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘எருமசானி’ ஹரிஜா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

தற்போது எக்கச்சக்க காமெடியுடன் குக் வித் கோமாளி ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஷிவாங்கி ஸ்கூல் கெட்டப்பில் வந்து அஸ்வினை பார்த்து ‘நல்லா பாதுப்பிங்களா சீனியர்’ என்று கேட்டு அரங்கத்தையே அலறவிட்டார். மேலும் பாபா பாஸ்கர் மாஸ்டருடன் புகழ் ஜோடி என இப்படி பல காம்போக்கள் இந்த எபிசோடில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தடவை வித்தியாசமாக டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது டிபன் கேரியர் டாஸ்க். அதுவும் ஒரு குச்சியை இடுப்பில் வைத்து கொண்டே சமைக்க வேண்டும். முதல் ப்ரோமோவில் ஷிவாங்கி பவித்ராவின் குச்சி கீழே விழுந்து விட அதற்கு ஷிவாங்கி மணிமேகலை அக்காவை போல தொப்பைக்கு மேலே குச்சியை வச்சுக்கலாம் என்று சொல்ல கொதித்தெழும் மணிமேகலை கோவத்தில் வார்த்தையை விட அரங்கமே கைகொட்டி சிரிக்கும் அளவிற்கு ஆகிறது.

அதாவது தான் சின்னத்திரை இலியானா என்று மணிமேகலை சொல்ல அனைவரும் வாய்விட்டே சிரித்து விடுகின்றனர். இது தான் இப்படி என்றால் அடுத்ததாக வெளியான ப்ரோமோவில் வெங்கட் பட் காம்பை வைத்து அடிக்க அவரை மணிமேகலையும், சரத்தும் மாறி மாறி அடிக்கின்றனர். அதற்கு வெங்கட் சார் கொடுத்த ரியாக்ஷனும் வேற லெவல். இப்படி பல அம்சங்களுடன் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here