சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அச்சத்தில் பிற அமைச்சர்கள்!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அமைச்சர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சருக்கு கொரோனா

கொரோனா என்ற நோய் தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இது மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இந்த நோய் பரவல் காரணமாக தற்போது வரை பல லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நோய் தொற்றினை தடுக்க வேண்டும் என்றும் பரவும் விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அரசு பொது முடக்கத்தினை அறிமுகப்படுத்தியது. பல அரசுத்துறை அமைச்சர்கள் முன்கள பணியில் ஈடுப்பட்டனர்.

வாட்ஸ் ஆப்பை இனி லாக் அவுட் செய்து கொள்ளலாம் – புதிய அப்டேட்!!

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் என்பவர் இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த மாநிலத்தின் சக அமைச்சர்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதும் அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து அவரே கூறியதாவது, “என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன். அனைவரின் பிராத்தனைகள் காரணமாக விரைவில் குணமாகி வீடு திரும்புவேன். அதே போல் பணிக்கும் திரும்புவேன். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டதால் என்னை நானே தனிமை படுத்திகொண்டேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here