அரசுப்பணி ஊழியர்கள் போராட்டம் – தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அதிரடி கைது!!

0

தற்போது அரசு ஊழியர்கள் பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகம் அருகில் தற்போது போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அரசு ஊழியர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அரசு ஊழியர்கள்:

தமிழகத்தில் தற்போது அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது. அவர்கள் கோரிக்கையாவது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போராட்டத்தில் 50கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் முதலில் சென்னை தலைமை செயலகத்தை நோக்கி சென்று, அங்குள்ள கடற்கரை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிந்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – அச்சத்தில் பிற அமைச்சர்கள்!!

அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அரசு ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்பு கடுமையாக முயற்சி செய்து போலீசார் அவர்கள் அனைவரையும் அதிரடியாக கைது செய்தனர். தற்போது அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here