தர்ஷனின் ‘தாய்க்குப்பின் தாரம்’ ஆல்பம் சாங் – ஒரே நாளில் 1 மில்லியன் வியூஸை அள்ளி சாதனை!!

0

கடந்த பிக்பாஸ் சீசன் 3ன் போட்டியாளர் தர்ஷன் நடித்துள்ள ஆல்பம் பாடல் ஒன்று வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தர்ஷனின் ஆல்பம் பாடல்

கடந்த 2019ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நட்சத்திர போட்டியாளர் தர்ஷன். இலங்கையை பூர்வீகமாக கொண்ட தர்ஷன் சினிமாத்துறையில் மாடலாக இருந்து வருகிறார். பொறியியலில் தொழிநுட்ப படிப்பை முடித்துள்ள தர்ஷன், சினிமா மீது தான் கொண்ட காதலால் இந்தியாவிற்கு வாய்ப்புகள் தேடி வந்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்ப காலங்களில் வாய்ப்புக்காக கஷ்டப்பட்ட அவர் தனது விடா முயற்சியால் மக்களால் அறியப்படும் மாடலாக உருவானார். பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட தர்ஷன் தனது குணத்தால் மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றார். அந்த சீசனில் வெற்றியாளர் தர்ஷன் தான் என மக்கள் நினைத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக கடைசி வாரம் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இவரைக்கண்டு, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்கள் உட்பட மற்ற அனைவருமே கண் கலங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த மேடையிலேயே நடிகர் கமல்ஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் தர்ஷன் ஒரு படம் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் நடிகர் கமல்ஹாசன்.

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘எருமசானி’ ஹரிஜா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் தர்ஷன், சமீபத்தில் நடித்துள்ள ‘தாய்க்குப்பின் தாரம்’ என்ற ஆல்பம் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பாடலில் தர்ஷனுடன் பிரபல சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார்.

பாடகர் ஹரிச்சரன் பாட, தரன் இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். இதனால் தர்ஷனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தர்ஷன் தற்போது லாஸ்லியாவுடன் ஒரு படத்தின் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here